ராமநாதபுரம் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயில் உள்ளது. இக்கோயிலில் உள்ள 22 தீர்த்தங்களை திறக்கவேண்டும். சுற்றுலா பயணிகள் செல்லக்கூடிய தனுஷ்கோடி சாலைகளை திறக்கவேண்டும். திருக்கோயில் மேற்கு கோபுர கடைகளை திறப்பதற்கு அனுமதி அளிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் அக்னி தீர்த்தக் கடலில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தீர்த்தங்களை நம்பியுள்ள மக்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டு உள்ளது. காரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வரும் சூழலை கருத்தில் கொண்டு மேற்கண்ட கோரிக்களை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 20க்கும் மேற்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: ராமேஸ்வரம் மீனவர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்!