ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பேருந்து நிலையம் எதிரே, நாளுக்கு நாள் அதிகரித்து வரும் டீசல், பெட்ரோல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலை உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த விலை உயர்வால் பொதுமக்கள் பல இன்னல்களை சந்தித்து வருவதாகவும், குறிப்பாக ஏழை எளிய மக்கள் சொல்ல முடியாத துயரங்களுக்கு ஆளாகி வருவதாகவும் கூறி சமையல் எரிவாயு உருளைகளைக்கும், டீசல், பெட்ரோல் கேன்களுக்கும் மலர் தூவி, மாலை அணிவித்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
இதேபோல் இருசக்கர வாகனங்களை சைக்கிளில் கயிறால் கட்டி இழுத்துச் சென்று நூதன முறையில் தங்கள் எதிர்ப்பை மத்திய அரசுக்கு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: சிலிண்டரை தலையில் சுமந்து ஆட்டோ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்