ETV Bharat / state

விசைப்படகு மீனவர்களை சிறைபிடித்த நாட்டுப்படகு மீனவர்கள்!

கடலோர மீன்பிடி ஒழுங்குமுறை சட்டத்தை மீறி கடற்கரையோரமாக மீன் பிடித்த விசைப்படகு மீனவர்களை நாட்டுப்படகு மீனவர்கள் சிறைபிடித்து மீன்வளத்துறை அலுவலர்களிடம் ஒப்படைத்தனர்.

விசைப்படகு மீனவர்களை சிறைபிடிப்பு
விசைப்படகு மீனவர்களை சிறைபிடிப்பு
author img

By

Published : Sep 1, 2021, 10:54 AM IST

ராமநாதபுரம்: விதியை மீறி கடற்கரையேரமாக மீன்பித்த விசைப்படகு மீனவர்கள் 10 பேரை நாட்டுப்படகு மீனவர்கள் சிறைபிடித்து மீன்வளத்துறை அலுவலர்களிடம் ஒப்படைத்தனர்.

தமிழ்நாட்டில் கடல் மீன்பிடி ஒழுங்குமுறைச் சட்டம் -1983 நடைமுறையில் உள்ளது. இந்தச் சட்டத்தின் படி, கடற்கரையில் இருந்து ஐந்து நாட்டிகல் தூரம்வரை நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க வேண்டும். ஐந்து நாட்டிகல் தாண்டியே விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க வேண்டும் என வரையறை செய்யப்பட்டுள்ளது.

இந்த விதிகளை மீறி சில விசைப்படகு மீனவர்கள் செயல்படுவதால், நாட்டுப்படகு மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இதனால் தென்மாவட்ட கடற்கரையோர கிராமங்களில் நாட்டுப்படகு, விசைப்படகு மீனவர்களுக்கிடையில் மோதல் போக்கு நீடித்து வருகிறது.

விதியை மீறி மீன்பிடித்த விசைப்படகு மீனவர்கள்

இந்த நிலையில் கடல் மீன்பிடி ஒழுங்குமுறைச் சட்டம் - 1983 விதிகளை மீறி ராமேஸ்வரம் அடுத்த சங்குமால், ஒலைக்குடா பகுதிகளில் கரையிலிருந்து ஐந்து நாட்டிகல் தொலைவிற்குள்ளாக, இசக்கிமுத்து, முகமது அஜமல்கான் ஆகியோருக்குச் சொந்தமான விசைப்படகுகளில் 10 மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

இவர்களை 30க்கும் மேற்பட்ட நாட்டுப்படகு மீனவர்கள் இரண்டு நாட்டுப்படகுகளில் சென்று சிறைபிடித்து வந்து சமூதயாக் கூடத்தில் சிறைவைத்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த கடலோர காவல்குழுமம் காவலர்கள் மற்றும் மீன்வளத்துறை அலுவலர்கள், நாட்டுப்படகு மீனவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, சிறைப்பிடிக்கப்பட்டிருந்த 10 விசைப்படகு மீனவர்கள் விடுவித்தனர். விசைப்படகுகளை மீன்வளத்துறை அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

தொடர்ந்து நாட்டுப்படகு மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் செயல்களில் ஈடுபடும் விசைப்படகு மீனவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். விதிமுறைகளை மீறி மீன்பிடிப்பில் ஈடுபட்ட விசைப்படகுகளின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நாட்டுப்படகு மீனவர்கள் முன்வைத்துள்ளனர்.

இதையும் படிங்க: ஏர்வாடி அருகே மீனவர் அடித்துக் கொலை - ஒருவர் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.