நாடு முழுவதும் கரோனா வைரஸ் பாதிப்பைத் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அந்த வகையில் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் கரோனா வைரஸ் தொற்றைத் தடுப்பதற்காக மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத் துறையின் சார்பில் கோயிலின் முன்பு கரோனா வைரஸ் கண்காணிப்பு மருத்துவக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழுக்களில் உள்ள மருத்துவர்கள் அங்கு சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களிடம் சோதனை நடத்தி, பின் அவர்களை கோயிலுக்குள் அனுமதிக்கின்றனர்.
இந்தக் கோயிலில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவருக்கும் முகக் கவசங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதேபோல் ராமநாதசுவாமி கோயில் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு வருகின்றது.
இதையும் படிங்க: கொரோனா பீதி: சட்டப்பேரவை நிகழ்வுகளைப் பார்க்க தடை!