ETV Bharat / state

தடுப்புப் பணியில் இருந்த மூன்று பேருக்கு கரோனா உறுதி

ராமநாதபுரம்: கரோனா தொற்று தடுப்புப் பணியில் இருந்த மூன்று பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

author img

By

Published : Apr 30, 2020, 3:42 PM IST

தடுப்பு பணியில் இருந்த மூன்று பேருக்கு கரோனா உறுதி

ராமநாதபுரம் மாவட்டத்தில் கரோனா வைரஸ் பாதிப்பு 15 ஆக இருந்த நிலையில் அதில் 10 பேர் சிவகங்கை அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியிலிருந்து பூரண குணமடைந்து வீடு திரும்பினர். மேலும் மீதம் இருந்த ஐந்து பேர் சிகிச்சையில் இருந்தனர். தற்போது மேலும் மூன்று பேருக்கு கரோனா பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ராமநாதபுரம் தேவிப்பட்டினத்தில் பணிபுரியும் 29 வயது காவலருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதேபோல் உச்சிப்புளி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் 33 வயது பெண்ணுக்கும், ராமநாதபுரம் தீயணைப்பு நிலையத்தில் பணிபுரியும் 29 வயது தீயணைப்பு வீரர் உள்ளிட்ட மூன்று பேருக்கு இன்று(ஏப் 30) கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு நாள்களுக்கு மேலாக ராமநாதபுரம் மாவட்டத்தில் கரோனா வைரஸ் பாதிப்பு இல்லாத நிலையில், தற்போது கரோனா வைரஸ் தடுப்புப் பணியில் இருந்த காவலர், தீயணைப்பு வீரர், சுகாதாரத் துறை பணியாளர்களுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருப்பது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட அந்த மூன்று பேரின் பகுதிகள் அனைத்தும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

இதையும் படிங்க: மருத்துவப்படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு: மே மாதத்திற்குள் அறிக்கை தாக்கல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.