உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸிலிருந்து மக்களை காப்பாற்ற உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அந்த வகையில், நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை பிரதமர் மோடி பிறப்பித்திருந்தார்.
ஆனால், இச்சமயத்திலும் அயராது உழைக்கும் காவல் துறையினர், மருத்துவர்கள், ஊடகவியலாளர்களை பாராட்டும் விதமாகவும், வைரஸ் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், நாட்டுப்புற பாடல் ஒன்றை முதுகுளத்தூரில் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றும் முத்து இருளாண்டி பாடியுள்ளார்.
அதில், கரோனா வைரசைத் தடுக்க மக்கள் அரசின் உத்தரவுகளை கடைப்பிடிக்க வேண்டும், கரோனா வைரசை எதிர்க்க மக்கள் ஒன்றுக்கூட வேண்டாம், மக்களுக்கான தேவைகளை அரசு சட்டமாக மாற்றியுள்ளது, பொருள்களை வாங்குவதற்கு ஒன்றுக்கூட வேண்டாம் உள்ளிட்ட வாக்கியங்கள் மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது. தற்போது, இந்தப் பாடல் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வைரலாகியுள்ளது.
இதையும் படிங்க: வைரஸ் பரவலை தமிழ்நாடு அரசு கட்டுக்குள் வைத்துள்ளது - மத்திய அமைச்சர் பாராட்டு