இராமநாதபுரம் மாவட்டத்தில் புதுப்பிக்கப்பட்ட முதுகுளத்தூர் சட்டப்பேரவை அலுவலகத்தைப் போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் திறந்து வைத்தார். முன்னதாக, அமைச்சர் நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு வருவதற்கு முன்பாக, திமுகவினர் சட்டப்பேரவை அலுவலகம் அருகே தகுந்த இடைவெளியின்றி திரண்டிருந்தனர்.
தொடர்ந்து அமைச்சர் ராஜகண்ணப்பன் வந்ததும், அங்கு கூடியிருந்த பெண்கள் நான்கு பேர் பூரண கும்ப மரியாதையை அமைச்சருக்குச் செய்தனர். அமைச்சரை சூழ்ந்தும், தகுந்த இடைவெளி இல்லாமலும் பொதுமக்கள், கட்சியினர் நடந்து கொண்டது கரோனா பரவலை மேலும் அதிகரிக்கும் சூழலை உருவாக்கியது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கரோனா நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்த எடுத்துவரும் பல்வேறு நடவடிக்கைகளுக்கு மத்தியில், அமைச்சர் பங்கேற்ற நிகழ்ச்சியில் கரோனா விதிமுறைகளைப் பின்பற்றாமல் மக்கள் கூடியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: காவலர்கள் சுழற்சி முறையில் பணியாற்ற டிஜிபி திரிபாதி உத்தரவு!