சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அடுத்துள்ள கல்யாணத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி. இவர் கமுதி அடுத்துள்ள கீழகாக்காகுளம் கிராமத்தில் தனது நண்பர்களுடன் கடலை தோட்டத்தில் விவசாய வேலை செய்துவந்துள்ளார்.
அப்போது, தோட்டத்திலிருந்த வறண்ட கிணற்றில் தடுமாறி விழுந்துள்ளார். இதில் படுகாயமடைந்த ரவி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சிறிது நேரம் கழித்து இவரது நண்பர்கள், உறவினர்கள் அக்கம்பக்கத்தில் தேடிப் பார்க்கும்போது ரவி கிணற்றில் சடலமாக கிடந்தது தெரியவந்தது.
பின்னர் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், உயிரிழந்தவரின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக கமுதி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: பவானி ஆற்றில் பட்டப்பகலில் மணல் கொள்ளை!