ராமநாதபுரம் மாவட்டம் பட்டணம்காத்தான் ஊராட்சி , சேதுபதி நகர் பகுதியில் இன்று (மே.27) மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நடமாடும் காய்கறி விற்பனை மூலம் காய்கறித் தொகுப்புகள் வினியோகம் செய்யப்படும் பணிகளை பார்வையிட்டார்.
இதையடுத்து பேசிய அவர், "முழு ஊரடங்கு காலத்தில் பொதுமக்களுக்குத் தங்குதடையின்றி காய்கறிகள் கிடைத்திட மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தோட்டக்கலைத் துறை மூலம் அனுமதி சீட்டுகள் வழங்கப்பட்டு வாகனங்களில் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் காய்கறி, பழங்கள் வினியோகிக்கப்பட்டு வருகின்றன.
காய்கறி விநியோகத்தில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தாலோ அல்லது கூடுதல் விலைக்கு விற்பனை செய்தாலோ ராமநாதபுரம் தோட்டக்கலை துணை இயக்குநர் ( 9443608932 ), வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர்களை ( மண்டபம் மற்றும் ராமநாதபுரம் ) 7299462970 , போகலூர், நயினார்கோவில் - 8667602994 , ஆர்.எஸ்.மங்கலம் - 9659584931 , திருவாடானை- 9751381492 , கமுதி- 9489166421, முதுகுளத்தூர், பரமக்குடி - 9488540830 , கடலாடி - 7598027841, திருப்புல்லாணி- 8220288448 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.
காய்கறிகள் விலை கூடுதல் விலைக்கு விற்பனை செய்த புகார் உறுதி செய்யப்படும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட வாகனத்தின் அனுமதி சீட்டு ரத்து செய்யப்படுவதுடன், ஊராடங்கு சட்டத்தின் கீழ் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.