ETV Bharat / state

தேவேந்திர குல வேளாளர்; 30 நாட்களுக்குள் தீர்வு! - முதலமைச்சர் உறுதி! - தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

ராமநாதபுரம்: ஏழு உட்பிரிவுகளை உள்ளடக்கி தேவேந்திர குல வேளாளர் என்று அறிவிக்கக்கோரிய பரிந்துரை மத்திய அரசிடம் உள்ளது என்றும், இன்னும் 30 நாட்களுக்குள் அப்பிரச்சனைக்கு தீர்வு எட்டப்படும் என்றும் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

speech
speech
author img

By

Published : Jan 2, 2021, 4:30 PM IST

Updated : Jan 2, 2021, 5:11 PM IST

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தேர்தல் பரப்புரையின் ஒரு பகுதியாக, ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூரில் கால்நடை பராமரிப்போர், பரமக்குடியில் நெசவாளர்கள், சௌராஸ்டிரா இனமக்கள், வர்த்தகர் சங்கம், மற்றும் பல்வேறு சமுதாயத் தலைவர்களுடன் கலந்துரையாடினார். அதனைத்தொடர்ந்து பரமக்குடி பேருந்து நிலையத்தில் திறந்த வெளியில் அவர் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.

அப்போது பேசிய முதலமைச்சர், ”நெசவாளர்களுக்கு பசுமை வீடுகள் வழங்கியது அதிமுக அரசு. கரோனா காலத்தில் நெசவாளர்களுக்கு ரூ.2,000 வழங்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் நெசவாளர்களுக்கு ரூ.300 கோடி கடன் தள்ளுபடி செய்யப்படுகிறது. இந்தியாவில் சட்டம் ஒழங்கு சிறப்பாக உள்ள மாநிலம் தமிழகம்தான். கரோனா கால பொருளாதார பாதிப்பு இருந்த நிலையிலும், ரூ.2,500 பொங்கல் பரிசு வழங்கப்படுகிறது.

தேவேந்திர குல வேளாளர்; 30 நாட்களுக்குள் தீர்வு! - முதலமைச்சர் உறுதி

ஏழு உட்பிரிவுகளை உள்ளடக்கி தேவேந்திர குல வேளாளர் என்று அறிவிக்கக்கோரிய பரிந்துரை, மத்திய அரசிடம் உள்ளது. நீங்கள் அனைவரும் நீண்ட நாட்களாக எதிர்பார்க்கும் முடிவு இன்னும் 30 நாட்களில் வந்து விடும். தேவேந்திர குல வேளாளர் என அந்தஸ்து வழங்குவதற்குரிய சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

இதையும் படிங்க: 'முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான்' - ஜி.கே. வாசன்

Last Updated : Jan 2, 2021, 5:11 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.