ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே இந்திய கடலோர காவல் படையின் விமான பிரிவு தளம் (ஐ.என்.எஸ் பருந்து) செயல்பட்டு வருகிறது. இங்கு பணிபுரியும் 150 வீரர்கள் பிரதம மந்திரியின் ஸ்வச் பாரத் அபியன் திட்டத்தின் கீழ் இன்று உச்சிப்புளி மற்றும் அதனை சுற்றியுள்ள கடற்கரை பகுதிகளில் இருந்த மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை சேகரித்தனர்.
இதில் கடற்படை வீரர்கள், டி.எஸ்.சி ஜவான்கள் ஆகியோருடன் பொதுமக்களும் அவர்களின் குடும்பத்தினருடன் கலந்துகொண்டு குப்பைகளை சேகரித்தனர். உச்சிப்புளியில் தொடங்கி வலங்கபுரி கடற்கரை வரை குப்பகளை சேகரித்தனர்.
மொத்தமாக 600 கிலோ மக்கும்-மக்கா குப்பைகளை சேகரித்து கடற்கரை பகுதியை தூய்மைபடுத்தினர். கடலோர காவல் படையினரின் இந்த செயல் அப்பகுதி மக்களிடையே பொதுஇடங்களில் குப்பை கொட்டுவதைத் தவிர்க்க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இருந்தது.
இதையும் படிங்க: நடிகை வனிதா விஜயகுமார், பீட்டர் பால் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு