ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன் கிராமத்தில் நாளை (அக்.30) முத்துராமலிங்க தேவரின் 113ஆவது பிறந்த நாள், குரு பூஜை நடைபெறவுள்ளது. இந்நிலையில், இன்று(அக்.29) காலை திடீரென ராமநாதபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து பரமக்குடி, கமுதி, முதுகுளத்தூர், சாயல்குடி, பார்த்திபனூர் பகுதிகளுக்கு பேருந்து சேவை நிறுத்தப்பட்டது.
இதனால் பேருந்து நிலையத்திலிருந்து சுப நிகழ்ச்சிகள், வேலைக்குச் செல்லும் பயணிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர். இது குறித்து பயணி மாரிமுத்து கூறுகையில், ”மண்டபத்தில் இருந்து பரமக்குடி செல்வதற்காக ராமநாதபுரம் பேருந்து நிலையம் வந்தேன். பேருந்துகள் இயக்கப்படாது என்று கூறுகின்றனர். முன்னறிவிப்பு கொடுத்திருந்தால் நாங்கள் மாற்று ஏற்பாடு செய்திருப்போம்” என்றனர்.
மேலும், இதுதவிர ராமேஸ்வரம், திருவாடானை, திருச்சி போன்ற பகுதிகளுக்கு பேருந்துகள் வழக்கம் போல இயக்கப்படுவதாகவும், மதுரை செல்லும் பேருந்துகள் ஆர்.எஸ். மங்களம், இளையான்குடி வழியாக இயக்கப்படும் என்றும் போக்குவரத்து துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: அமமுக பிரமுகர் மீது கொலைவெறி தாக்குதல் - காவல்துறையினர் விசாரணை