ETV Bharat / state

புரெவி புயல்: பாம்பன் துறைமுகத்தில் 7ஆம் எண் புயல் கூண்டு ஏற்றம் - தமிழ்நாடு செய்திகள்

ராமநாதபுரம்: தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக பாம்பன் துறைமுகத்தில் 7ஆம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

பாம்பன்
பாம்பன்
author img

By

Published : Dec 2, 2020, 11:07 AM IST

Updated : Dec 2, 2020, 11:30 AM IST

தென்மேற்கு - தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று (டிச. 02) இரவு இலங்கையின் திரிகோணமலை அருகே கரையைக் கடந்து, பின் டிசம்பர் 4ஆம் தேதி அதிகாலை கன்னியாகுமரி கடற்கரைப் பகுதியை நெருங்கும். இதற்குப் புரெவி புயல் எனப் பெயரிட்டுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து கன்னியாகுமரி, பாம்பன் இடையே கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக பாம்பன் துறைமுகத்தில் 7ஆம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டதுடன் ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் பகுதி மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடைவிதித்து மீனவளத் துறை அலுவலர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

இதனால் மீனவர்கள் தங்களின் விசைப்படகுகளைக் கரையோரம் நங்கூரமிட்டு நிறுத்திவைத்துள்ளனர். மீனவர்களின் வாழ்வாதாரமாக இருக்கக்கூடிய விசைப்படகுகளை பாதுகாக்க ராமேஸ்வரம், பாம்பம், மண்டபம் பகுதியில் தூண்டில் வளைவு பாலம் அமைக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: புரெவி புயல் முன்னெச்சரிக்கை: தயார் நிலையில் தேசிய பேரிடர் மீட்புக் குழு

Last Updated : Dec 2, 2020, 11:30 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.