ராமநாதபுரம் மாவட்டம கமுதி அடுத்த கே.வேப்பங்குளம் கிராமத்தில் அரியநாச்சி அம்மன் கோவிலின் மூன்றாம் ஆண்டு வருடாபிஷேசம் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இதனையொட்டி அவ்வூரில் மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது.
சிறிய மற்றும் பெரிய மாட்டு வண்டிகளுக்கு என தனித்தனியாக நடைபெற்ற இப்பந்தயத்தில் ராமநாதபுரம்,தூத்துக்குடி , சிவகங்கை , விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து மாட்டு வண்டி பந்தய வீரர்கள் கலந்து கொண்டனர்.
பெரிய மாட்டு வண்டி பந்தயம் வேப்பங்குளத்திலிருந்து கமுதி சாலையின் வழியாக 12 கி.மீ தொலைவிற்கும் சிறிய மாட்டு வண்டி பந்தயம் கமுதி சாலையில் 10 கி.மீ தொலைவிற்கும் நடந்தது.இதில் வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்கபணம்,குத்துவிளக்கு,அண்டா உள்ளிட்டவைகள் பரிசாக வழங்கப்பட்டது. இந்த பந்தயத்தை ஆயிரக்கணக்கான மக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டனர்.