ராமநாதபுரம்: கடல் நீர் அவ்வப்போது பருவநிலை மாற்றம் காரணமாக நிறம் மாறுவது வழக்கம். சில சமயங்களில் கடலில் ஏற்படும் புயல் நிலநடுக்கம் போன்ற காரணங்களால் கடல் நீர் வேறு ஒரு நிறமாக மாறுவதற்கு வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. இதனால் மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்கள் சற்றுத் தயங்குவார்கள்.
எனவே இந்த நிற மாற்றத்திற்கான காரணம் என்னவென்று அலுவலர்கள் ஆய்வுசெய்து தெரிவிக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர். சென்ற ஆண்டும் இதேபோல் கடலில் நிறம் மாறியது குறிப்பிடத்தக்கது.
இதுபோன்ற நிகழ்வுகளைக் கடலில் அவ்வப்போது பார்க்க முடியும். இதற்குக் காரணம், உயிரொளிர்வு (Bioluminescence) என்னும் தன்மைதான். ஓர் உயிரினம் மூலம் இயற்கையாக உருவாகும் ஒளியையே இப்படி அழைக்கின்றனர்.
மின்மினிப் பூச்சிகள் இதற்கு ஓர் உதாரணம். இப்படி கடலோரங்களில் அலைகள் மின்னுவதற்கு dinoflagellates என்ற ஒரு பாசி (Algae) வகைதான் காரணம் என்றும் கூறப்படுகிறது.
ஒருவேளை அந்த வகை பாசிகள் அதிகப்படியாக கரை ஓரங்களில் ஒதுங்கி இருக்கலாம் என்பதால் கடல் முழுவதும் பச்சை நிறமாகக் காட்சியளிக்கிறது என ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்.
இதையும் படிங்க : கோபியில் ரூ.7 கோடி மதிப்பீட்டில் சந்தை கட்டுவதற்கான பூமி பூஜை