ராமநாதபுரம்: உச்சிப்புளி அருகே உள்ள ஐஎன்எஸ் கடற்படை தளத்தில் உள்ள மருத்துவப் பிரிவு வளாகத்தில் ரத்ததான முகாம் நடைபெற்றது.
இதனை ஐஎன்எஸ் கடற்படைத் தளத்தின் நிலைய கமாண்டர் கேப்டன் வெங்கடேஷ் ஆர் ஐயர் தொடங்கி வைத்தார்.
அப்போது மருத்துவக் குழு ரத்த தானத்தின் நன்மைகள் குறித்து கூட்டத்திற்கு விளக்கமளித்தது. இதில் கடற்படை தளத்தில் உள்ள வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் என மொத்தமாக 82 யூனிட் ரத்தம் தானமாக ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் கரோனா தொற்று தடுப்பு வழிகாட்டுதல்கள் முறையாக பின்பற்றப்பட்டன.
இதையும் படிங்க:’தடுப்பூசி போடும் முன் ரத்த தானம் செய்யுங்க’ - மருத்துவர்கள் வேண்டுகோள்!