ETV Bharat / state

கமுதியில் பாஜக வெற்றி - திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட தயங்கியதே காரணம்

author img

By

Published : Feb 9, 2022, 3:17 PM IST

கமுதி பேரூராட்சியின் 14ஆவது வார்டில் பாஜக போட்டியின்றி வெற்றி பெற்றுள்ளது. சாதியும், மதமும் கைகோர்த்துள்ள பகுதி என்பதால் அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடத் தயங்கிய நிலையில், பாஜக இந்த வார்டைக் கைப்பற்றியுள்ளது.

கமுதியில் பாஜக வெற்றி
கமுதியில் பாஜக வெற்றி

ராமநாதபுரம்: தமிழ்நாடு முழுவதும் வருகின்ற பிப்ரவரி 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், வேட்பு மனுதாக்கல் முடிந்து, இறுதி வேட்பாளர் பட்டியலும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பேரூராட்சியும் தற்போது தமிழ்நாடு முழுவதையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

கமுதி பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. சாதியும், மதமும் ஆதிக்கம் செலுத்தும் முக்கியத்துவம் வாய்ந்த பகுதி என்பதால், இங்கு இப்பேரூராட்சியின் தலைவர், துணைத்தலைவர் ஆகியோரை சுழற்சி முறையில் தேர்வு செய்யவது வழக்கமாக இருந்து வருகிறது.

இங்குள்ள 15 வார்டுகளுக்கும் திமுக, அதிமுக, கம்யூனிஸ்ட், பாஜக உள்ளிட்ட கட்சிகள் வேட்பு மனுதாக்கல் செய்துள்ளனர். குறிப்பாக அதிமுக 2, பாஜக 6, திமுக 8, கம்யூனிஸ்ட் 1 என இங்குள்ள வார்டுகளில் போட்டியிட்டன. இங்குள்ள அனைத்து வார்டுகளிலும் சுயேச்சைகள்தான் அதிகளவில் போட்டியிடுகின்றனர். அனைத்து வார்டுகளிலும் மொத்தம் 46 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.

கமுதி பேரூராட்சிக்கு உட்பட்ட 14ஆவது வார்டில் திமுக, அதிமுக உள்ளிட்ட பெரிய கட்சிகள் எவையும் போட்டியிடவில்லை. காரணம் முன்பே பேரூராட்சியிலும், வார்டு முக்கியப் பிரமுகர்கள் எடுத்த முடிவின் அடிப்படையிலும் சாதி பிரதிநிதித்துவ அடிப்படையிலும் இந்த முறை பாஜக சார்பாக நின்ற பெண் வேட்பாளர் சத்யா ஜோதிராஜா எதிர்ப்பின்றி வெற்றி பெற்றவராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இங்கு மொத்தமுள்ள 15 வார்டுகளில் 10 வார்டுகளுக்கு போட்டியின்றி சுயேச்சை வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பாஜக வென்ற அக்குறிப்பிட்ட வார்டில் சுயேச்சைகள் எவரும் போட்டியிடாததால், பாஜக வேட்பாளரான சத்யா ஜோதிராஜா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பாஜக சார்பாக நிற்காமல், சுயேச்சையாக நின்றிருந்தாலும் சத்யா ஜோதிராஜாதான் வெற்றி பெற்றிருப்பார். காரணம் சாதி ஆதிக்கம் மட்டுமன்றி, இந்த முறை இவர்களுக்காகத்தான் இந்த வார்டு ஒதுக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: சென்னை வேட்பாளர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.