ETV Bharat / state

நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது- பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் - Respect to Muthuramalingam devar

ராமநாதபுரம்: 7.5 விழுக்காடு இடஒதுக்கீட்டை வரவேற்கிறோம், ஆனால் நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என்று தமிழ்நாடு பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்தார்.

l murugan
l murugan
author img

By

Published : Oct 30, 2020, 4:42 PM IST

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்தில் பாஜக மாநில தலைவர் எல்.முருகன், ஹெச்.ராஜா, நயினார் நாகேந்திரேன் ஆகியோர் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எல். முருகன், "முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அடிக்கடி முத்துராமலிங்க தேவர் பற்றி பேசுவார். தேவர் பின்பற்றிய தேசியமும் தெய்வீகமும் என்ற வழியில்தான் பாஜக இயங்கி வருகிறது. ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ள 7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டை தமிழ்நாடு பாஜக வரவேற்கிறது.

அதேபோல் வேல் யாத்திரை முதலமைச்சரின் கனவை நிஜமாக்காது என்பதால் ஸ்டாலின் பயப்படுகிறார். வேல் யாத்திரை கண்டு பயப்படும் ஸ்டாலின் தூங்க முடியாமல் தவிக்கிறார்" எனக் கூறினார்.

நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது

மேலும்,நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது. மாணவர்களை திசை திருப்புவதை விட்டுவிட்டு மாணவர்களை படிப்பதற்கு ஊக்குவியுங்கள்" என்றும் கூறினார்.

இதையும் படிங்க: "வேறுவழியின்றி ஒப்புதல் அளித்ததற்கு நன்றி, என்றும் வெல்லும் சமூகநீதி" - ஸ்டாலின் ட்வீட்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.