ETV Bharat / state

ராமநாதபுரத்தில் தொடங்கியது பறவைகள் கணக்கெடுப்பு பணி ! - ramanadhapuram district news

ராமநாதபுரம் : மாவட்டத்தில் உள்ள ஐந்து பறவைகள் சரணாலயங்களில் கணக்கெடுப்பு பணி தொடங்கியது.

பறவைகள் கணக்கெடுப்பு பணி
பறவைகள் கணக்கெடுப்பு பணி
author img

By

Published : Feb 17, 2021, 7:44 PM IST

ராமநாதபுரம் மாவட்டத்தில் தேர்த்தங்கல்,பெரிய கண்மாய் சக்கரக்கோட்டை , மேலக் கீழேச் காஞ்சிரங்குடி, சித்தார்கோட்டை என்று ஐந்து பறவைகள் சரணாலயங்கள் உள்ளன. இந்த பறவைகள் சரணாலயங்களில் நத்தை கொத்தி நாரை, கரண்டிவாயன் மூக்கன், பூநாரை, உள்ளிட்ட பல்வேறு வகையான வெளி, உள்நாட்டு வலசைப் பறவைகள் வந்து தங்கி முட்டையிட்டுக் குஞ்சு பொறித்து மார்ச் மாதக் கடைசியில் மீண்டும் திரும்பி செல்லும்.

இதனையொட்டி, இன்றும், நாளையும் (பிப்.17,18) பறவை கணக்கெடுக்கும் பணி பறவையியலாளர் சந்திரசேகர் தலைமையில் நடைபெறுகிறது. இந்த கணக்கெடுப்பு பணியின்போது செய்யது அம்மாள் கலை, அறிவியல் கல்லூரி மாணவ, மாணவிகள் உடனிருந்து கணக்கெடுக்கும் பணியை செய்தனர்.

பறவைகள் கணக்கெடுப்பு பணியில் மாணவர்கள்

நாளை மேலச்செல்வனூர், காஞ்சிரங்குடி,சித்தார்கோட்டை ஆகிய பகுதிகளில் நடைபெறும் பறவை கணக்கெடுக்கும் பணியில் சேது கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள் இணைந்து பணியாற்ற உள்ளதாக வனத்துறையின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:திருப்பூரில் பாதாள சாக்கடையை சுத்தம் செய்ய இனி ரோபோ இயந்திரம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.