ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேஸ்வரம், சேதுக்கரை, திருப்புல்லாணி, தேவிப்பட்டினம், மாரியூர் போன்றவை முக்கிய புண்ணியத் தலங்கள் ஆகும்.
இங்கு ஆண்டுதோறும் ஆடி அமாவாசை தினத்தன்று உள்மாவட்டம், வெளிமாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் கடற்கரையில் கூடி மறைந்த முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் போன்ற மதச் சடங்குகளில் ஈடுபடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இந்த ஆண்டு கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த விதிக்கப்பட்டுள்ள 144 தடை உத்தரவு காரணமாக, வருகின்ற திங்களன்று(ஜூலை 20) ஆடி அமாவாசை தினத்தன்று, இந்தப் பகுதிகளுக்கு மக்கள் கூடுவது தடை விதிக்கப்பட்டுள்ளது.
மீறி, அப்பகுதிகளுக்கு வருவோர் மீது நடவடிக்கையும்; அவர்கள் வரும் வாகனமும் பறிமுதல் செய்யப்படும் என்று ராமநாதபுரம் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் வருண்குமார் எச்சரித்துள்ளார்.