இராமநாதபுரம்: கமுதி அருகே முஷ்டக்குறிச்சியை சேர்ந்தவர் செல்லமுத்து மகன் செல்வலிங்கம்(32). இவர் கமுதியில் உள்ள ஒரு பேக்கரி கடையில் ஊழியராக வேலை பார்த்துவந்தார்.
தினமும் பைக்கில் வேலைக்கு சென்று திரும்பும் இவர், வழக்கம்போல் நேற்று(செப்.25) வேலையை முடித்துவிட்டு, நள்ளிரவு 12 மணியளவில், தனது இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பியுள்ளார். அப்போது அவரை வழிமறித்த கும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றுவிட்டது. இதில் சம்பவ இடத்திலேயே செல்விலிங்கம் உயிரிழந்தார்.
இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திக் உத்தரவின் பேரில் கமுதி துணை காவல் கண்காணிப்பாளர் பிரசன்னா, ஆய்வாளர் அன்புபிரகாஷ், ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று செல்வலிங்கத்தின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக கமுதி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைத்து, முஷ்டக்குறிச்சியை சேர்ந்த மாரிமுத்து, நாகநாதன், செல்லத்துரை, முத்துக்குமார், முருகவேல், பாலகிருஷ்ணன், நாகவடிவேல் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, அதில் செல்லத்துரையை காவல் துறையினர் கைது செய்தனர். பேக்கரி ஊழியரை கொலை செய்த நிகழ்வு அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:மனைவி மீது ஏற்பட்ட சந்தேகத்தினால் நேர்ந்த கொலை...