ETV Bharat / state

மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடிப்பதைத் தவிர்த்தல் தொடர்பாக விழிப்புணர்வுக் கூட்டம் - ராமநாதபுரம் மீனவர்கள்

ராமநாதபுரம்: இந்திய கடல் எல்லையைத் தாண்டி மீன்பிடிப்பதை தவிர்த்தல் தொடர்பாக மீனவர்களுக்கான விழிப்புணர்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.

ராமநாதபுரத்தில் இந்திய கடல் எல்லை தாண்டி மீன் பிடிப்பதை தவிர்த்தல் தொடர்பாக மீனவர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது

author img

By

Published : Sep 9, 2020, 9:58 PM IST

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக அரங்கில் மீன்வளத்துறை சார்பாக, இந்திய கடல் எல்லைதாண்டி மீன் பிடிப்பது தொடர்பாக மீனவர்களுக்கு விழிப்புணர்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் வீர ராகவ ராவ் தலைமையில் நடைபெற்றது.

அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த மாவட்ட ஆட்சியர் வீர ராகவ ராவ், 'ராமநாதபுரம் மாவட்டம், ஏறத்தாழ 237 கி.மீ நீளம் கடற்கரை கொண்டதாகும். 180 மீனவக்கிராமங்களில் சுமார் 1 லட்சத்து 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் உள்ளனர். மாவட்டத்தில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக மீன்பிடித்தொழிலே பெரும்பான்மை மக்களின் முக்கியத்தொழிலாக உள்ளது. மேலும் இந்திய சர்வதேச கடல் எல்லை அருகாமையில் உள்ளது.

குறிப்பாக, குறைந்தபட்சமாக தனுஷ்கோடியிலிருந்து 9 நாட்டிக்கல் மைல் தொலைவிலும், அதிகபட்சமாக தொண்டியிலிருந்து 24 நாட்டிக்கல் மைல் தொலைவிலும் அமைந்துள்ளது. மீனவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்திடும் வகையில், அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, இந்திய கப்பல் படை, கடலோர பாதுகாப்புப்படை, ஐஎன்எஸ் பருந்து மற்றும் மீன்வளத்துறை ஒருங்கிணைந்து மீனவர்களுக்கான பாதுகாப்பு மற்றும் மீட்பு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில் கடலில் மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள் இயற்கை சூழ்நிலைகளாலும், கவனக்குறைவினாலும் சில சமயங்களில் இந்திய சர்வதேச கடல் எல்லையைத் தாண்டும் நிலை ஏற்படுகிறது. இது சர்வதேச சட்ட விதிகளின்படி குற்றமாகும். மீனவர்கள் இத்தகைய சூழ்நிலைகளை கட்டாயம் தவிர்த்திட வேண்டும்.

மேலும், வடகிழக்குப் பருவமழை தொடங்கவுள்ள காரணத்தால், வானிலை தொடர்பாக அரசு அறிவிக்கும் முன்னெச்சரிக்கை அறிவிப்புகளை முறையாகப் பின்பற்றிட வேண்டும். கடலில் மீன்பிடிக்கச் செல்லும் முன் படகு, இயந்திரம் ஆகியவற்றின் நிலைப்புத்தன்மையை உறுதி செய்திட வேண்டும். தொலைத்தொடர்பு கருவிகள், பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் மிதவைகளை கட்டாயம் கொண்டு செல்ல வேண்டும்.

இக்கூட்டத்தில், கடலோர காவல் படை கமாண்டன்ட் ராஜ நாகேந்திரன், ஐஎன்எஸ் பருந்து கமாண்டன்ட் சிலம்பரசன், கடற்படை கமாண்டன்ட் திரு.அனில்குமார் தாஸ், மீன்வளத்துறை துணை இயக்குநர் பிரபாவதி மற்றும் மீனவப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.