தமிழ்நாடு முழுவதிலும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு சார்பில் பல்வேறு உதவித் தொகைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
ராமநாதபுரம் மாவட்டம், சமூக நலத்துறை மூலமாக நலவாரியங்களில் உள்ள உறுப்பினர்களுக்கு வாழ்வாதாரத் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், உதவிடும் விதமாக மூன்றாம் பாலினத்தவர் 119 பேருக்கு ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.
மேலும் நலவாரியத்தின் மூலமாக குடும்ப அட்டை பெற்ற 70 மூன்றாம் பாலினத்தவருக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களான 12 கிலோ அரிசி, ஒரு கிலோ பருப்பு, ஒரு கிலோ சமையல் எண்ணெய் வழங்கப்பட்டுள்ளது. தற்போது இரண்டாம் கட்டமாக ஆயிரம் ரூபாய் 119 பேருக்கு, உதவித்தொகையாக மாவட்ட ஆட்சியர் வீர ராகவ ராவ் வழங்கினார். மொத்தமாக இதுவரை, தலா ஒவ்வொருவருக்கும் 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 'மக்களுக்கு சிறு கடனை குறைந்த வட்டியில் வழங்க வேண்டும்' - ராமதாஸ் கோரிக்கை