ராமநாதபுரம் மாவட்டத்தில் கரோனா வைரசால் பாதிப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. ஆரம்பத்தில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிசிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்தன் காரணமாக ராமநாதபுரம் அரசு மருத்துவமனை, பரமக்குடி அரசு மருத்துவமனை மற்றும் சில அரசு ஆரம்பச் சுகாதார நிலையங்களில் கரோனா சிறப்பு சிகிச்சைப் பிரிவு அமைக்கப்பட்டு, அங்கு சிகிச்சையளிக்கப்பட்டது.
இந்நிலையில், மாவட்டத்திற்கு சென்னை உள்ளிட்ட வெளிமாவட்டங்களிலிருந்து வருபவர்களால் கரோனா வைரஸ் மற்றவர்களுக்குப் பரவும் அபாயம் ஏற்பட்டது. இதனால் வெளிமாவட்டங்களிலிருந்து 300க்கும் மேற்பட்டவர்கள் கண்டறியப்பட்டு, அரசு கலைக்கல்லூரியில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் சிலருக்குத் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், முன்னேற்பாடாக ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் உத்தரவின்படி பரமக்குடி சுகாதாரத் துறை துணை இயக்குநர் ஆலோசனையில் பரமக்குடி அரசு கலைக்கல்லூரியை மருத்துவமனையாக மாற்றும் பணி நடைபெற்றுவருகிறது. இங்குள்ள வகுப்பறைகளில் 132 படுக்கைகள் அமைக்கப்பட்டு, கரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சையளிக்க வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தந்தை - மகன் இறந்த வழக்கில் டிஜிபி, எஸ்பி ஆஜராக உத்தரவு