ETV Bharat / state

நடுக்கடலில் மூழ்கிய படகு: மேலும் ஒருவரின் சடலம் மீட்பு

ராமநாதபுரம்: நடுக்கடலில் படகு கவிழ்ந்த விபத்தில் மேலும் ஒருவரது சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது.

ramnad
author img

By

Published : Sep 8, 2019, 7:09 PM IST

ராமேஸ்வரம் நடராஜபுரத்தைச் சேர்ந்த 10 மீனவர்கள் கடலூர் சென்று புதிதாக படகு வாங்கிவிட்டு திரும்பும் வழியில் மல்லிப்பட்டினம் கடல் பகுதியில் படகு மூழ்கியது. இந்த விபத்தில் படகில் இருந்த 10இல் எட்டு பேர் மாயமாகினர். இதில் நான்கு மீனவர்களை 4ஆம் தேதியன்று மீட்புக் குழுவினர் உயிருடன் மீட்டனர்.

மற்ற இரண்டு மீனவர்களைத் தேடும் பணியில் முன்னேற்றம் உள்ளதாகவும், மாலைக்குள் மீட்கப்படுவர் எனவும் ஆட்சியர் கூறியிருந்தார்.

இந்நிலையில் அவர்கள் காணாமல் போன ஐந்தாவது நாளான இன்று, மண்டபம் கடல் பகுதியில் இன்று மீண்டும் ஒரு உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, மீட்கப்பட்ட உடலைப் பெறுவதற்காக மீனவரின் உறவினர்கள் நாட்டு படகில் நடுக்கடலுக்கு விரைந்துள்ளனர். இது இலங்கேஸ்வரன் உடலா, உமாகாந்த் உடலா என்பது கரைக்கு வந்த பிறகே தெரியவரும். மேலும், நேற்று மீட்கப்பட்ட மதன், கந்தக்குடியான் உடல்களைப் பெற உறவினர்கள் ராமேஸ்வரத்தில் இருந்து பட்டுக்கோட்டைக்குச் சென்றுள்ளனர்.

Intro:இராமநாதபுரம்
செப்.8
மாயமான இராமேஸ்வரம் மீனவர்களில் மேலும் ஒரு மீனவர் உடல் மீட்பு.Body:

ராமேசுவரம் நடராஜபுரத்தை சேர்ந்த 10மீனவர்கள் கடலூர் சென்று புதிதாக படகு வாங்கித் திரும்பும் வழியில் படகு மல்லிப்படிணம் நடுக்கடலில் கப்பல் மூழ்கியது படகில் இருந்த 10ல் எட்டு பேர் மாயமாகினர்.
இதில் 4 மீனவர்களை உயிருடனும் 4தேதி மீட்புக் குழுவினர் மீனவர்கள் உதவியுடன் மீட்டனர்.
நேற்று
மதன், காந்தக்குடியான்
சடலமாக மீட்கப்பட்டனர்.
மற்ற இரண்டு மீனவர்களின் உடல்களை தேடும் பணியில் முன்னேற்றம் உள்ளதாகவும் மாலைக்குள் மீட்கப்படுவர் என ஆட்சியர் கூறினார். இந்நிலை மீனவர்கள் உடல்கள் கண்டுபிடித்து மீட்கும் பணியில் மீண்டும் தொய்வு ஏற்பட்டது.
இன்றும் 5வது நாளாக தேடும் பணி நடைபெற்றது.

இதில் ஒரு உடல் மண்டபம் கடலோர காவல் படைக்கு சொந்தமான பிரியதர்ஷினி கப்பலால் மீட்கப்பட்டுள்ளது.

மீட்க்கப்பட்ட உடலை கப்பலிடம் இருந்து பெறுவதற்காக மல்லிபட்டிணத்தில் இருந்து மீனவர்களின் உறவினர் நாட்டுபடகில் நடுக்கடலுக்கு விரைந்துள்ளனர்.
இது இலங்கேஸ்வரன் உடலா, உமாகாந்த் உடலா என கரைக்கு வந்த பிறகே தெரியும்.நேற்று மீட்கப்பட்ட
மதன்,கந்தக்குடியான் உடல்களை பெற உறவினர்கள் இராமேஸ்வரத்தில் இருந்து பட்டுக்கோட்டைச் சென்றுள்ளனர்.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.