ராமநாதபுரம் நகராட்சிக்குட்பட்ட திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் இலகுரக வாகனம் மற்றும் மின்கலங்கள் இயக்கக்கூடிய வாகனத்தின் மூலம் திடக்கழிவுகளை சேகரிக்கும் திட்டத்தை தமிழ்நாடு தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவராவ் ஆகியோர் இணைந்து தொடக்கி வைத்தனர்.
இதையடுத்து, செய்தியாளர்களிடம் அமைச்சர் மணிகண்டன் பேசுகையில், "இலகுரக வாகனம் மற்றும் மின்கலங்களால் இயக்கக்கூடிய வாகனங்கள் மூலம் மக்கும், மக்கா குப்பைகள் என தரம் பிரிக்கப்பட்டு சிறய துகள்களாக மாற்றப்படும். ராமநாதபுரம் மாவட்டத்தில் 10 கோடி ரூபாய் செலவில் அனைத்துப் பகுதிகளிலும் சிறந்த முறையில் சாலைகள் போடப்பட்டு வருகிறது. அமமுகவில் உள்ள அனைவரும் அதிமுகவை நோக்கி வந்து கொண்டிருக்கின்றனர். தமிழ்நாட்டில் இன்னும் 6 மாதத்தில் அமமுக என்ற கட்சியே இருக்காது" என்றார்.