ராமேஸ்வரம் அருகே மண்டபம் கடற்கரை பகுதியில் அப்பகுதியைச் சேர்ந்த சில மீனவர்கள் தங்கள் வலைகளை பழுது பார்ப்பதற்காக சென்றனர். அப்போது கல்லிலான ஒரு அடி உயரமுள்ள அம்மன் சிலை கடல் பகுதியில் கிடப்பதைக் கண்டதும் கடல்சார் காவல்துறையினரிடம் தகவல் தெரிவித்தனர்.
இது குறித்து கடல்சார் காவல்துறையினர் கூறியதாவது, ”அம்மன் சிலை சிதைந்த நிலையில் உள்ளதால் என்ன அம்மன் சிலை என்பதை உறுதி செய்ய முடியவில்லை. ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடற்பகுதியில் நேத்திக் கடனை செலுத்தும் வகையில் இந்த சிலை கடலில் விடப்பட்டதா? என்பது குறித்தும் விசாரிக்கப்பட்டு வருகிறது” என்றனர்.