ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ். மங்கலம் தாலுகா உப்பூரில் அம்மா மினி கிளினிக் சேவையை திருவாடானை சட்டப்பேரவை உறுப்பினர் கருணாஸ் தொடங்கி வைத்தார். அப்போது அவருடன் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.
பின்னர் மருத்துவரிடம் கருணாஸ் ரத்த அழுத்த பரிசோதனை செய்துகொண்டார். தொடர்ந்து கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து அடங்கிய பெட்டியை கருணாஸ் வழங்கினார்.
இந்த மினி கிளினிக் ஒவ்வொரு நாளும், காலை 8 மணி முதல் 12 மணிவரையும் மாலை 4 மணி முதல் 7 மணிவரையும் இயங்கும்.
இதையும் படிங்க: திருப்பத்தூரில் 6 இடங்குகளில் மினி கிளினிக்குகள் தொடக்கம்