தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களை தனியாருக்கு கொடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் தமிழ்நாடு அரசின் முயற்சிகளை கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி சிஐடியு, ஏஐடியுசி, எல்பி எஃப் உள்ளிட்ட அனைத்து போக்குவரத்துக் கழக தொழிற்சங்கங்களின் சார்பில் ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, முதுகுளத்தூர் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில், தமிழ்நாடு மோட்டார் வாகன விதி 288 (A)-ஐ கைவிட வேண்டும். தனியார் பேருந்தை வாடகைக்கு எடுக்கும் முயற்சியை நிறுத்த வேண்டும். தொழிலாளியிடம் பறிக்கப்பட்ட விடுப்பையும், சம்பளத்தையும் திரும்ப அளிக்க வேண்டும்.
மாணவர்கள் உள்ளிட்ட சமூகத்தின் பல்வேறு பிரிவினருக்கு கிடைத்துவரும் இலவச பயணச் சேவையை முறையாக செயல்படுத்த வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.