ராமநாதபுரத்தில் உள்ள நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் கைப்பற்றியது. ராமநாதபுரம் தொகுதியில் கடந்த 3 முறை நடைபெற்ற தேர்தல்களில் திமுக நேரடியாக போட்டியிடவில்லை, 2016 தேர்தலில் மனித நேய மக்கள் கட்சியும், 2011 ஆண்டு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ், 2006 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் மதிமுக போட்டியிட்டது. 2001 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் திமுக போட்டியிட்டு தோல்வியை சந்தித்தது.
இதனால் ராமநாதபுரம் சட்டப்பேரவைத் தொகுதியை தனது கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கி வந்த நிலையில், 20 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த தொகுதியில் திமுக களம் கண்டது. அக்கட்சியன் வேட்பாளராக காதர்பாட்சா என்கிற முத்துராமலிங்கத்தை களமிறக்கியது.
அதிமுக கூட்டணியில் பாஜக வேட்பாளர் குப்புராமு போட்டியிட்டார். வாக்கு எண்ணிக்கை முதல் சுற்றில் இருந்து திமுக வேட்பாளர் முன்னிலை பெற்று வந்தார். இறுதியாக 50, 362 வாக்கு வித்தியாசத்தில் காதர் பாட்சா வெற்றிபெற்றார்.
அவர் 1 லட்சத்து 11ஆயிரத்து 75 வாக்குகளையும், பாஜக சார்பாக போட்டியிட்ட குப்புராமு 60ஆயிரத்து 763 வாக்குகளையும் பெற்றனர்.ராமநாதபுரம் சட்டபேரவைத் தொகுதியில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு திமுக தனது வெற்றியை பதிவு செய்துள்ளது.