ராமநாதபுரம் மாவட்டத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிடும் பாஜக, அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து வாலாந்தரவை ஊராட்சியில் பாஜகவின் நட்சத்திரப் பேச்சாளர் நடிகை கெளதமி பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது அவர் கூறுகையில், "நான் செல்லும் ஒவ்வொரு இடத்திலும் மக்களின் ஒத்துழைப்பு மிகவும் நன்றாக உள்ளது. ஒத்துழைப்பு என்று சொல்வதைவிட என்னுடன் இணைந்து செயல்படுகிறார்கள்.
ஒரே கட்சி ஒரே கூட்டணி என்ற நோக்கத்தோடு அனைவரும் போராடிக் கொண்டிருக்கிறோம். எந்தவிதமான கருத்து வேறுபாடும் என் கண்களில் படவில்லை.
இங்குள்ள ராமநாதபுரம் வேட்பாளர் நியாயமான நேர்மையான வேட்பாளர்; அவருக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. இது அவருடைய சொந்த ஊரு; சொந்த பூமி. இதுவரை அவருடைய பொது வாழ்க்கையில அவர் செய்த சேவைகள் அதிகம்.
அவர் செய்த சேவையை அடுத்தகட்டத்துக்கு கொண்டுசெல்வதற்கான அருமையான வாய்ப்பு இது, மக்கள் மத்தியில் நல்ல புரிதல் இருக்கிறது. மக்கள் அவர் வெற்றிபெற வேண்டும் என்று நினைக்கிறார்கள்.
தமிழ்நாட்டில், தேர்தல் வெற்றி முடிவு அனைவருக்குமே முக்கியம். ஒவ்வொரு கட்சியின் செயல்பாடுகளும் ஒவ்வொரு மாதிரி இருக்கும்" என்றார்.
இதையும் படிங்க: ராஜபாளையத்தில் பாஜக சார்பில் நடிகை கௌதமி போட்டி?