திமுகவில் அழகிரியின் தீவிர ஆதரவாளராக அறியப்பட்ட ஜே.கே.ரித்தீஷ், 2009-14 ஆம் ஆண்டுகளில் ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியின் உறுப்பினராக இருந்துள்ளார்.
அதன்பின், கடந்த 2014ஆம் ஆண்டு திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த அவர், அரசியல் மட்டுமின்றி சினிமாவிலும் நடிக்கத் தொடங்கினார். 2008ஆம் ஆண்டு நாயகன் என்னும் படத்தில் மிடுக்கான போலீஸ் வேடத்தில் நடித்து கலைத்துறையிலும் கால் பதித்தார். பின்னர் பெண் சிங்கம், சமீபத்தில் வெளியான அரசியல் காமெடி படமான எல்.கே.ஜி உள்ளிட்ட படங்களிலும் அரசியல்வாதியாக நடித்திருந்தார்.
இந்நிலையில், தற்போது அதிமுகவிற்கு ஆதரவாக தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்த அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரித்தீஷ், அங்கு சிகிச்சை பலனின்றி காலமானார்.