ஆண்டுதோறும் ஆடி அமாவாசையன்று ராமேஸ்வரத்திற்கு 5 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வருவது வழக்கம். அவ்வாறு வருபவர்கள் தங்களது முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுத்து கடலில் புனித நீராடி ராமநாதசுவாமியை வணங்கிவிட்டுச் செல்லுவார்கள்.
இந்தாண்டு கரோனா அச்சத்தால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கினால், கடற்கரையில் மக்கள் கூடுவதற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தடை விதித்திருந்தார். இதனால், ரமேஸ்வரம் கடற்கரை வெறிச்சோடி காணப்பட்டது. மேலும், தர்ப்பணம் கொடுப்பதற்காக கடல் பகுதியை நோக்கி வந்த மக்களை தடுப்புகள் அமைத்து காவல் துறையினர் திருப்பி அனுப்பிவருகின்றனர்.
கரோனா ஊரடங்கு அனைத்து தரப்பட்ட மக்களையும் கடுமையாக பாதித்துள்ளது, ஆடி அமாவாசையான இன்று மட்டும் ரூ.5 கோடி வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக யாத்திரிக சங்கத் தலைவர் மகேந்திரன் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கடையில் வைத்திருந்த கல்லாப்பெட்டி திருட்டு: சிசிடிவி பதிவுகள்