ராமநாதபுரம், திருவாடானை அருகேவுள்ள ஆதியூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார். இவர், தனது வீட்டில் சட்டவிரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதாக திருப்பதாக குற்றப்பிரிவு காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது.
அந்தத் தகவலின்படி குற்றப்பிரிவு சார்பு ஆய்வாளர் சரவணன் தலைமையிலான காவல் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று, ராஜ்குமார் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 15 பெட்டிகளில் இருந்து 720 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
மேலும், சட்டவிரோதமாக வீட்டில் பதுக்கி வைத்து மதுபாட்டிகளை விற்பனை செய்த ராஜ்குமாரைக் கைது செய்த காவல் துறையினர், அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.