ETV Bharat / state

கனமழையால் ராமநாதபுரத்தில் 89 ஆயிரம் ஹெக்டர் நிலங்கள் பாதிப்பு!

ராமநாதபுரம்: மாவட்டத்தில் கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த வேளாண் துறை ஆய்வில் 89 ஆயிரம் ஹெக்டர் சேதமடைந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

89 thousand hectares of land in Ramanathapuram affected by heavy rains!

author img

By

Published : Jan 23, 2021, 9:59 AM IST

ராமநாதபுரம் மாவட்டத்தில் கனமழையின் காரணமாக ஏற்பட்ட பயிர் பாதிப்புகள் குறித்து மேற்கொள்ளப்பட்டு வரும் கணக்கெடுப்பு பணிகளை தமிழ்நாடு அரசு வேளாண்மைத்துறை இயக்குநர் தட்சிணாமூர்த்தி, மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

குறிப்பாக, ஆர்.எஸ்.மங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கற்காத்தகுடி, கருங்குடி ஆகிய கிராமங்களுக்கும், நயினார்கோவில் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட காரடர்ந்தகுடி, அ.காச்சான் ஆகிய கிராமங்களுக்கும் நேரடியாக சென்று பயிர் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்து விவசாயிகளின் குறைகளை கேட்டறிந்தார்கள்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த வேளாண்மைத்துறை இயக்குநர், “தமிழ்நாட்டில் ஜனவரி மாதத்தில் பெய்த கனமழையின் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பயிர்கள் சேதமடைந்துள்ளன. குறிப்பாக ராமநாதபுரம் மாவட்டத்தில் ஜனவரி மாத சராசரி மழையளவு 48.50 மி.மீ ஆகும். நடப்பாண்டில் ஜனவரி 20 வரையில் மட்டும் 247.30 மி.மீ மழையளவு பதிவாகியுள்ளது. இதன் காரணமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பயிர் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

முதற்கட்டமாக மேற்கொள்ளப்பட்டுள்ள கணக்கெடுப்பு பணிகளின்படி மாவட்டத்தில் 79,210 ஹெக்டர் நெற்பயிர்களும், 4569 ஹெக்டர் சிறுதானிய பயிர்களும், 3030 ஹெக்டர் பயிறு வகைகளும், 1079 எண்ணெய் பித்து பயிர்களும் சேதமடைந்துள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. விவசாயிகள் பாதிக்கப்படாத வகையில் உரிய நிவாரணம் வழங்க ஏதுவாக ஊராட்சி ஒன்றியங்கள் வாரியாக கிராமங்களில் வேளாண்மைத் துறை மற்றும் வருவாய்த் துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து பயிர் பாதுகாப்பு குறித்த கணக்கெடுக்கும் விரிவான கள ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இப்பணிகளை ஜனவரி 29 ஆம் தேதிக்குள் நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில் பயிர் பாதிப்பு குறித்த விரிவான அறிக்கை அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்டு, விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என தெரிவித்தார்.

இதையும் படிங்க: 'சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக மண்ணை கவ்வும்' - எம்.என்.ராஜா

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.