ராமநாதபுரம் எம்.ஜி.ஆர்.நகர் பகுதியில் வசிக்கும் நரிக்குறவர் பிரிவைச் சார்ந்தவர்களுக்கு மாவட்ட செஞ்சிலுவைச் சங்கம் சார்பாக மாவட்ட ஆட்சியர் வீர ராகவ ராவ் உணவுப்பொருட்கள் அடங்கிய நிவாரணத் தொகுப்புகளை வழங்கினார்.
அப்போது அவர் மக்களிடையே பேசுகையில், "மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 896 நபர்களுக்கு கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் 11 நபர்களுக்கு கரோனா தொற்று உள்ளது. 806 நபர்களுக்கு தொற்று இல்லை. மீதமுள்ள 79 நபர்களுக்கான பரிசோதனை முடிவுகள் விரைவில் வர உள்ளது.
நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் உறவினர், தொடர்புடையவர்கள் 543 நபர்கள் கண்டறியப்பட்டு, அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஆனந்தூர் ஆகியப் பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன" என்றார்.
மேலும், மக்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கவேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க: கரோனா வைரஸ் பாதிப்பு: முத்து நகரமான தூத்துக்குடியின் பொருளாதார நிலை?