கரோனா தொற்றின் இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது.இதனை தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பல்வேறு அரசு மருத்துவமனைகளில் இன்று (மே 10) ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அவர் கூறியதாவது, `ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை உட்பட அரசு மருத்துவமனைகள் , அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ’ஆயிரத்து 500 படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன . 4 தனியார் மருத்துவமனைகளில் 200 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன.
சிகிச்சைக்கு தேவையான ஆக்சிஜன் உட்பட உயிர் காக்கும் மருந்துகள் போதிய அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளன. மாவட்டத்தில் 76 ஆயிரத்து 187 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன் வரவேண்டும், தடுப்பூசி குறித்த சந்தேகளுக்கு ஆலோசனை பெற இலவச உதவி எண் 04568-1077ஐயும் அவர் வெளியிட்டார்.