ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இலங்கைக்கு கடத்த முயன்ற 5 ஆயிரம் டெட்டனேட்டர்கள் காவல் துறையிடம் சிக்கியது. இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த காரணத்தால், வெடிபொருள்கள் பத்திரமாக பாதுகாக்கப்பட்டு வந்தன.
இந்நிலையில் இன்று, வழக்கை விசாரித்த நீதிபதி, வெடிப்பொருள்களை அழித்திட உத்தரவிட்டார். இதையடுத்து, மதுரையிலிருந்து வந்த வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள் குழுவினர், ராமேஸ்வரத்தை அடுத்துள்ள தனுஷ்கோடி கடற்கரை பகுதியில் 5000 டெட்டனேட்டர்களை வெடிக்கச் செய்து அழித்தனர்.
இதையும் படிங்க:தூத்துக்குடியில் கஞ்சா விற்ற இருவர் கைது: 1,200 கிலோ கஞ்சா பறிமுதல்