ETV Bharat / state

300 கிலோ பச்சைக்கடல் அட்டைகள் பறிமுதல்! - சையது புராஹிம்சா மகன் முஹம்மது மன்சூர் அலிகானை கைது

தேவிப்பட்டினம் கடற்கரைப்பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட சுமார் 300 கிலோ மதிப்பிலான பச்சைக்கடல் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டு, இது தொடர்பாக ஒருவரை கைது செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

பச்சை கடல் அட்டைகள் 300 கிலோ பறிமுதல்
பச்சை கடல் அட்டைகள் 300 கிலோ பறிமுதல்
author img

By

Published : Aug 2, 2022, 5:34 PM IST

ராமநாதபுரம்: தேவிப்பட்டினம் கடற்கரைப்பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட கடல் அட்டைகளை கடத்துவதாக தேவிப்பட்டினம் கடற்கரை போலீசாருக்கு கிடைத்தது. அந்த ரகசியத்தகவலின்பேரில் இன்று அதிகாலை சார்பு ஆய்வாளர் அய்யனார் தனி பிரிவு காவலர் இளையராஜா, முதுநிலை காவலர் சரவணபாண்டி ஆகியோர் தேவிப்பட்டினம் வடக்கு கடற்கரையில் ரோந்து சென்ற போது அங்கு சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த ஊதா கலர் ஆம்னி வாகனத்தைப் பிடித்து சோதனை செய்தனர்.

அப்போது அதில் அரசால் தடை செய்யப்பட்ட பச்சைக்கடல் அட்டைகள் 21 சாக்கு பைகளில் சுமார் 300 கிலோ அளவிற்கு மேல் இருந்தது தெரியவந்தது. வாகனத்துடன் இருந்த கடல் அட்டைகளை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். அதனைத்தொடர்ந்து தேவிப்பட்டினம் பெரியகடை தெருவைச்சேர்ந்த சையது புராஹிம்சா மகன் முஹம்மது மன்சூர் அலிகானை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

இதையும் படிங்க:"எனக்கு தெரியாமலேயே என் வீட்டில் பணம் வைக்கப்பட்டுள்ளது" - கைதான நடிகை அர்பிதா முகர்ஜி பேட்டி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.