ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ். மங்களம் காவல் நிலைய சரகத்தில், 2 வீடுகள், பள்ளிக்கூடம் ஆகிய இடங்களில் நடந்த திருட்டு சம்பவம் தொடர்பாக, திருவாடானை உட்கோட்ட குற்றப்பிரிவு சார்பு ஆய்வாளர் சிவலிங்க பெருமாள் தலைமையிலான காவல் துறையினர் தீவிரமாக விசாரணை செய்துவந்தனர்.
அதில் குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட அழியாதான்மொழி கிராமத்தை சேர்ந்த திலீப் குமார், சூசைமாணிக்கம் ஆகியோரை கைது செய்து, அவர்களிடமிருந்து 1 லேப்டாப், 36 ஆயிரம் ரூபாய் பணம், பஜாஜ் பல்சர் இருசக்கர வாகனம் ஆகியவை மீட்கப்பட்டு, வழக்கில் சம்பந்தப்பட்ட மேற்படி 2 பேரை காவல் துறையினர் நீதிமன்ற காவலில் அடைத்தனர்.
அதேபோல் கோவிலாங்குளம்,மேலவில்லனேந்தல் கிராமத்தை சேர்ந்த முத்து இருளாயி என்ற மூதாட்டியின் வீட்டில் 13 பவுன் தங்க நகைகள் திருடுபோனது சம்பந்தமாக கமுதி உட்கோட்ட குற்றப்பிரிவு சார்பு ஆய்வாளர் சகாதேவன் தலைமையிலான காவல் துறையினர் தீவிரமாக விசாரணை செய்து, சம்பவத்தில் ஈடுபட்ட பாண்டி பிரசாத் என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து 13 பவுன் களவு சொத்துகளை மீட்டனர். வழக்கில் சம்பந்தப்பட்ட பாண்டி பிரசாத் என்பவர் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த பணியில் ஈடுபட்ட காவல் துறையினரை காவல் கண்காணிப்பாளர் கார்த்திக் பாராட்டினார்.
இதையும் படிங்க:நகைக்கடையில் திருட திட்டம் தீட்டிய 5 பேர் கைது