ETV Bharat / state

’ராமநாதபுரத்தில் 288 பதற்றமான வாக்குச் சாவடிகள்’ - ஆட்சியர் தகவல்

ராமநாதபுரம்: ஆட்சியர் அலுவலகத்தில் சட்டப்பேரவை பொதுத்தேர்தல் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற ஆட்சியர், ராமநாதபுரத்தில் 288 பதற்றமான வாக்குச்சாவடிகள் இருப்பதாகத் தெரிவித்தார்.

ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அதிகாரிகள்.

author img

By

Published : Mar 24, 2021, 12:37 PM IST

ராமநாதபுரம் மாவட்டம், சட்டப்பேரவை பொதுத்தேர்தல் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் குறித்து ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதுகுறித்து ஆட்சியர் பேசுகையில், “ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் முன்னேற்பாடு நடவடிக்கைகள் அனைத்தும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வேட்புமனுக்கள் பரிசீலிக்கப்பட்டு வேட்பாளர்கள் பட்டியல் இறுதி செய்யப்பட்டுள்ளது.

வாக்குப்பதிவிற்காக ஆயிரத்து 647 வாக்குச்சாவடி மையங்கள் ஏற்படுத்தப்பட்டு அடிப்படை வசதிகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. அதில் 80 இடங்களில் அமைந்துள்ள 228 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமானவையாகக் கண்டறியப்பட்டுள்ளது. தேர்தல் பணிகளில் ஈடுபடுவதற்காக எட்டாயிரத்து 305 அலுவலர்களுக்கு பணி ஒதுக்கீடு செய்யப்பட்டு, முதற்கட்ட பயிற்சி நிறைவேற்றப்பட்டுள்ளது. நாளை (மார்ச் 25) இரண்டாம்கட்டப் பயிற்சியும், ஏப்ரல் 5ஆம் தேதி மூன்றாம் கட்ட பயிற்சியும் வழங்கிட திட்டமிடப்பட்டுள்ளது.

தேர்தல் பணியில் ஈடுபடும் பணியாளர்கள் வாக்கு செலுத்த ஏற்றவாறு தபால் வாக்குச்சீட்டு பெறுவதற்கான படிவங்கள் பெறும் பணிகள் நடைபெற்று வருகின்றன. வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்தப்படும் பொருள்கள் அனைத்தும் தயார் நிலையில் வைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தேர்தல் நன்னடத்தை விதிகள் கண்காணிப்புப் பணிகளும் தொடர்ந்து விழிப்புடன் மேற்கொள்ளப்படுகின்றன” என்றார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திக், பொதுத்தேர்தல் பார்வையாளர்கள், தேர்தல் செலவினப் பார்வையாளர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.

இதையும் படிங்க: திரைப்பட பைரஸியை மையப்படுத்தி வெளிவரும் சீரிஸ்: சோனி லிவ்வுடன் கைகோர்க்கும் ஏவிஎம் நிறுவனம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.