ராமநாதபுரம் மாவட்டத்தில் கரோனா இரண்டாவது அலை படிப்படியாக உயர்ந்து வருகிறது. கடந்த வாரத்தில் ஒரு நாளைக்கு 200 பேர் வீதம் தொற்று புதிதாக பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், நேற்று (மே. 6) ஒரே நாளில் புதிதாக 228 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1328 ஆக உயர்ந்துள்ளது. 192 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
அரசு, தனியார் மருத்துவமனையில் கரோனா படுக்கைகள் வேகமாக நிரம்ப தொடங்கி உள்ளது. இதனால் மக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.
முறையாக முகக்கவசம் அணிதல், தகுந்த இடைவெளி பின்பற்றுதல், தடுப்பூசி செலுத்திக் கொண்டால் மட்டுமே தொற்று பரவலைக் கட்டுப் படுத்த முடியும் என சுகாதாரத் துறை அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.