ராமேஸ்வரம் பாம்பன் விவேகானந்தர் தெரு அருகே விற்பனைக்காக மது பாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் காவல்துறையினர் அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, குப்பை கிடங்கு அருகே பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்த 2 ஆயிரத்து 111 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதில் தொடர்புடைய ரவிச்சந்திரன், மலைச்சாமி, ரீகன் ஆகிய மூவர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.
மது பாட்டில்களை விற்பனை செய்த டாஸ்மாக் மேற்பார்வையாளர் பெரியசாமி மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : தலைவனாக தகுதியற்றவர் என் கணவர் - பாஜக வேட்பாளரின் மனைவி புகார்!