புரெவி புயலுக்காக பாம்பன் சின்னப்பாலம் கடல் பகுதியில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுமார் 200 மீன் பிடி விசைப் படகுகள் இன்று(டிச.8) ரயில் தூக்குப்பாலம் திறக்கப்பட்டதை தொடர்ந்து ராமேஸ்வரம் மண்டபம் பகுதிகளுக்கு கடந்து சென்றன.
சில படகுகள் முந்திக்கொண்டு படகுகள் செல்லும்போது ஒன்றோடு ஒன்று மோதி சிக்கிக்கொண்டு பாலத்தில் இடித்து நின்றது.
இதனால் பாலம் சேதமடைந்தது படகின் பின்பகுதி முற்றிலும் முறிந்து சாய்ந்தது. இந்த விபத்தால் ரயில்வே அலுவலர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சிறிது நேரத்தில் படகுகள் மீட்கப்பட்டு கடந்து சென்றன. துக்குப்பாலத்தில் மோதிய படகின் உரிமையாளர் மீது ரயில்வே காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதனைத்தொடர்ந்து மும்பையில் இருந்து வந்த பிஎஸ்எப் (எல்லை பாதுகாப்பு படை) வீரர்களின் இரண்டு கப்பல்கள் பாலத்தை கடந்து மேற்கு வங்காளம் சென்றன.
இதையும் படிங்க: வேலை நிறுத்தம் - சென்னையில் வழக்கம்போல் ஓடிய பேருந்துகள்!