ETV Bharat / state

கரை திரும்பிய ராமேஸ்வரம் மீனவர்கள் 20 பேர்! - Rameswaram fishermen Election boycott

ராமநாதபுரம்: எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கைக் கடற்படையினர் சிறைப்பிடித்த 20 மீனவர்கள் விடுவிக்கப்பட்டு இரண்டு படகுகளுடன் கரை திரும்பினர்.

Fishermen back  கரை திரும்பிய ராமேஸ்வரம் மீனவர்கள் 20 பேர்  ராமேஸ்வரம் மீனவர்கள்  ராமேஸ்வரம் மீனவர்கள் தேர்தல் புறகணிப்பு  20 Rameswaram fishermen returned to shore  Rameswaram fishermen  Rameswaram fishermen Election boycott
20 Rameswaram fishermen returned to shore
author img

By

Published : Mar 27, 2021, 10:36 AM IST

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்திலிருந்து கடந்த 24ஆம் தேதி கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற 300-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது, ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இரண்டு படகுகள், 20 மீனவர்களைக் கைதுசெய்து விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.

இந்நிலையில், நேற்று (மார்ச் 26) நல்லெண்ண அடிப்படையில் பிடிப்பட்ட மீனவர்களை விடுதலை செய்தது இலங்கை அரசு. இதையடுத்து தங்கள் படகுகளில் 20 மீனவர்களும் ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகம் வந்தடைந்தனர்.

முன்னதாக இச்சம்பவம் மீனவர்களிடையே கொந்தளிப்பபை ஏற்படுத்திய நிலையில் இலங்கை கடற்படையின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதுடன், தேர்தலை புறக்கணிக்க போவதாகவும் அறிவித்தது குறிப்பிடதக்கது.

இதையும் படிங்க: கரை திரும்பிய நாகை மீனவர்கள் 20 பேர்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.