ETV Bharat / state

இலங்கையிலிருந்து ஒரே நாளில் 19 இலங்கை தமிழர்கள் தமிழ்நாடு வருகை - இலங்கை தமிழர்கள் தமிழ்நாடு வருகை

பொருளாதார நெருக்கடியால், இலங்கையிலிருந்து இன்று (ஏப். 10) ஒரே நாளில் 19 இலங்கை தமிழர்கள் ராமேஸ்வரம் மற்றும் மண்டபம் பகுதிகளுக்கு படகு மூலம் வந்துள்ளனர்.

srilanka economic crisis  srilankans come to tamil nadu  srilankans come to tamil nadu due to economic crisis  இலங்கை பொருளாதார நெருக்கடி  இலங்கை தமிழர்கள் தமிழ்நாடு வருகை  இலங்கை பொருளாதார நெருக்கடி இலங்கை தமிழர்கள் தமிழ்நாடு வருகை
இலங்கை பொருளாதார நெருக்கடி
author img

By

Published : Apr 10, 2022, 3:07 PM IST

ராமநாதபுரம்: இலங்கை பொருளாதார நெருக்கடி காரணமாக அந்நாட்டு மக்கள் கடும் அவதியில் உள்ளனர். இதனிடையே ஒன்பது இலங்கை தமிழர்கள் அகதிகளாக தனுஷ்கோடி வந்துள்ளனர். இந்த 9 பேரும் யாழ்ப்பாணம் மற்றும் மன்னாரை சேர்ந்தவர்கள். படகு மூலம் மன்னாரில் இருந்து புறப்பட்டு இன்று (ஏப். 10) அதிகாலை தனுஷ்கோடி வந்தடைந்தனர்.

அங்கிருந்து பேருந்து மூலமாக மண்டபம் அகதிகள் முகாமிற்கு சென்றுள்ளனர். அவர்களிடம் மரைன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் மன்னார் பகுதியில் இருந்து மேலும் 10 பேர் மணல் தீடைக்கு வந்தடைந்துள்ளனர்.

இந்த தகவலையறிந்த கடலோர காவல் படையினர் 10 பேரையும் மீட்டு கொண்டு வர ஹெவர் கிராப்ட் கப்பல் மூலம் மணல் தீடைக்கு சென்றுள்ளனர். அந்த வகையில், இன்று ஒரே நாளில் 19 இலங்கை அகதிகள் தமிழ்நாட்டிற்கு வந்துள்ளனர்.இலங்கையில் பொருளாதார நெருக்கடி தொடங்கியதில் இருந்து மொத்தம் 41 இலங்கை தமிழர்கள் அகதிகளாக தமிழ்நாட்டிற்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: இலங்கையிலிருந்து அகதிகளாக தனுஷ்கோடிக்கு மேலும் 4 பேர் வருகை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.