ETV Bharat / state

பத்திர எழுத்தாளர் வீட்டில் 16 பவுன் தங்க நகைகள், ரூ. 1.5 லட்சம் திருட்டு - ramanadhapuram

ராமநாதபுரம் கீழக்கரை அருகே பத்திர எழுத்தாளர் வீட்டில் 16 பவுன் தங்க நகைகள், 1.5லட்சம் ரூபாய் பணம் திருடுபோன சம்பவம், அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

பத்திர எழுத்தாளர் வீட்டில்  16 பவுன் தங்க நகைகள், ரூ. 1.5 லட்சம் திருட்டு

author img

By

Published : Aug 14, 2021, 7:49 PM IST

ராமநாதபுரம்: கீழக்கரை அருகே லெட்சுமிபுரத்தை சேர்ந்தவர் டிட்டோ. இவர், கீழக்கரையில் உள்ள பத்திரப் பதிவு அலுவலகத்தில் பத்திர எழுத்தாளராக உள்ளார். நேற்றிரவு தனது வீட்டைப் பூட்டிவிட்டு உறவினர் வீட்டுக்கு இவர் சென்றுள்ளார்.

இதனை நோட்டமிட்ட கும்பல், பத்திரப் எழுத்தர் டிட்டோ வீட்டிற்குள் நேற்று இரவு புகுந்து 16 பவுன் தங்க நகைகள், ரூ.1.5 லட்சம் ரொக்கப் பணத்தை திருடிச் சென்றுள்ளது.

இதுகுறித்து, அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கீழக்கரை காவலர்கள், கொள்ளையர்கள் விட்டுச்சென்ற தடயங்களை சேகரித்துள்ளனர்.

மேலும், இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்துவருகின்றனர். இந்நிலையில், இன்று திருட்டுச் சம்பவம் நடந்த இடத்திற்கு ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்தி நேரில் சென்று விசாரணை நடத்தினார்.

மேலும், கீழக்கரை பகுதியில் கொலை, கொள்ளை, திருட்டு உள்ளிட்ட குற்றச் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதால் இதற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திக் கூடுதல் காவலர்களை நியமித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: மீனவர்களிடையே மோதல்: 4 விசைப் படகுகளுக்கு தீ வைப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.