ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே கழுவன்பொட்டல் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜமல்லு. இவரது குடும்பத்திற்கும், அதே ஊரைச் சேர்ந்த துரைப்பாண்டி குடும்பத்திற்கும் ஏற்கெனவே தீபாவளி அன்று பட்டாசு வெடித்ததில் முன்விரோதம் இருந்துள்ளது.
உயிரிழந்த முதியவர்
இந்நிலையில், நேற்றிரவு இரு தரப்பினருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டு பிரச்னை எழுந்துள்ளது. இதையடுத்து துரைப்பாண்டி தரப்பினர் கிரிக்கெட் மட்டை, கம்பி, கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் ராஜமல்லுவையும், அவரது உறவினர்களான பால்பாண்டி, வேல்ராஜ் ஆகியோரைத் தாக்கியுள்ளனர்.
இதில் பலத்த காயமடைந்த மூன்று பேரும் கமுதி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு மருத்துவர்கள் சோதனை செய்ததில் ராஜமல்லு, ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். பால்பாண்டி, வேல்ராஜ் ஆகிய இருவரையும் சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக பரிந்துரை செய்துள்ளனர்.
14 நபர்கள் மீது வழக்குப்பதிவு
இந்த சம்பவம் தொடர்பாக ராஜமல்லுவின் மனைவி மல்லம்மாள் கொடுத்த புகாரின் பேரில் துரைப்பாண்டி, மாரிசாமி, சேகர், விஜயேந்திரன், சோலையப்பன், கோபாலகிருஷ்ணன், ஆனந்தகுமார், உள்ளிட்ட 14 பேர் மீது மண்டலமாணிக்கம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, அவர்களைக் கைது செய்தனர்.
இதையும் படிங்க: 'தேர்தல் நாளில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் பூத் ஏஜெண்ட் கொலை!'