ETV Bharat / state

120 டன் கருவேல மரங்கள் கடத்தல் - லாரியை மடக்கிப் பிடித்த பொதுமக்கள்!

ராமநாதபுரம்: தனுஷ்கோடியிலிருந்து லாரியில் கடத்த முயன்ற 120 டன் கருவேல மரங்களை பொது மக்கள் தடுத்து நிறுத்தி, வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

கடத்த முயன்ற 120 டன் கருவேல மரங்களை பறிமுதல்
author img

By

Published : Nov 12, 2019, 11:12 PM IST

ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடியிலிருந்து கருவேல மரங்கள் இரண்டு நாட்களாகத் தொடர்ந்து, லாரியில் கடத்தப்பட்டு வந்துள்ளது. இதைப் பொதுமக்கள் கவனித்து வந்துள்ளனர். இந்நிலையில், மரங்களைக் கடத்தி செல்லும் லாரிகளை புதுரோடு மீனவ கிராம மக்கள் மடக்கிப் பிடித்தனர்.

பின்னர், உடனடியாக வருவாய்த்துறை அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வருவாய்த்துறை அதிகாரிகள், லாரியை சோதனை செய்ததில், கருவேல மரங்கள் குறித்து எந்த விதமான முறையான ஆவணங்களும் இல்லை என தெரிய வந்தது

கடத்த முயன்ற 120 டன் கருவேல மரங்கள் பறிமுதல்

இது குறித்து வனவர் பாண்டியராஜன் கூறுகையில், " முறையான விளக்கமளிக்காமல், உயர் அலுவலர்கள் ஒப்புதலோடு மரங்கள் எடுத்துச் செல்லப்படுகிறது" எனத் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து பொதுமக்கள் கூறுகையில், கருவேல மரங்கள் 120 டன் எடுத்துச் செல்ல வனத்துறையினர் எந்த விதமான டெண்டரும் அளிக்காமல், சட்ட விரோதமாக எடுத்துச் செல்ல துணையாக இருந்து வருவதாகப் புகார் தெரிவித்தனர். தற்போது, சிறைப்பிடிக்கப்பட்ட மூன்று லாரிகளும் தங்கச்சிமடம் வனத்துறையினர் அலுவலகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.

இதையும் படிங்க: திம்பம் மலைப்பாதையில் வெங்காயம் லாரி கவிழ்ந்து விபத்து!

Intro:இராமநாதபுரம்
நவ.12

தனுஷ்கோடியிலிருந்து லாரியில் கடத்த முயன்ற மரங்கள் பொதுமக்கள் தடுத்து நிறுத்தி வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.Body:.

இராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடியிலிருந்து கருவேல மரங்களை வெட்டி
இரண்டு நாட்களாக தொடர்ந்து லாரியில் மூலம் தொடர்ந்து கடத்த பட்டு வந்துள்ளது. இந்நிலையில் நேற்று இரவு கருவேலம மரங்கள் வெட்டி லாரியில் எடுத்து சென்றுள்ளனர். இதனை கண்ட புதுரோடு மீனவ கிராம மக்கள் லாரியை மடக்கி பிடித்தனர். பின் வருவாய்த்துறை அதிகாரிகளிடம் இது குறித்து தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த வருவாய்துறை அதிகாரிகள் லாரியில் உள்ள விறகு முறையான எந்தவிதமான ஆவணமும் இல்லை, மேலும் வனத்துறையினரும் இது குறித்து முறையான விளக்கமளிக்காமல் உயர் அதிகாரிகள் ஒப்புதலோடு எடுத்து செல்லப்படுவதாக வனத்துறை வனவர் பாண்டியராஜன் தெரிவித்தார். கருவேலம் மரங்கள்
120 டன் எடுத்துச் செல்ல வனத்துறையினர் எந்தவிதமாக டெண்டரும் அளிக்காமல் சட்ட விரோதமாக எடுத்து செல்ல துணையாக இருந்து வருவதாக கிராம பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இதனையடுத்து சிறைபிடிக்கப்பட்ட 3 லாரிகள் தங்கச்சிமடம் வனத்துறையினர் அலுவலகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.