ராமநாதபுரம் பஜார் பகுதியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் சட்ட விரோதமாக பணம் வைத்து சீட்டு விளையாடுவதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில், காவல் ஆய்வாளர் முத்துப்பாண்டி தலைமையிலான காவலர்கள் அங்கு சென்றனர்.
அப்போது, சீட்டு விளையாடிக் கொண்டிருந்த இளையராஜா, முத்து, முருகேசன், காசிராஜன் உள்பட 10 பேரை கைது செய்து, அவர்களிடமிருந்து ஒரு மடிக்கணினி, ரூ.31 ஆயிரத்து 500 ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திக் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனால், காவல்துறையினர் தொடர்ந்து ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: கோவையில் லாட்டரி சீட்டு வியாபாரி கைது